கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம் 

கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அனைத்து துறைகளின் சார்பாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப் படத்திற்கு கல்லூரியின் முதல்வர் அகிலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அனைத்து துறைத் தலைவர்களும், அந்தந்தத் துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களோடு ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா எழுதிய “அன்புள்ள ஆசிரியர்களே” என்ற புத்தகம் ஆசிரியர் தின பரிசாக நிர்வாகத்தினால் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு துறையிலும் தொழில் நுட்பம் மற்றும் கேளிக்கைகள் சார்ந்த நிகழ்ச்சிகள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடினர்.

ஒவ்வொரு வருடமும் நிகழும் இந்த நிகழ்வில் அந்தந்த துறை சார்ந்த மாணவர்களுக்கும், நல்லாசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் வெகுமதிகளும் வழங்கப்பட்டன.

ஆசிரியர் தினத்தை கொண்டாடும் விதமாக அனைத்து ஆசிரியர்களுக்கும் விதை பென்சில் வழங்கப்பட்டது. இந்த பென்சில்லானது காகித கழிவில் இருந்து தயாரிக்கப்பட்டது.

இந்த பென்சிலின் அடிப்பாகத்தில் ஒரு விதை ஒன்று இருக்கும், பென்சிலால் எழுதி முடித்த பின்னர் அடிப்பாகம் தூக்கி எறியப்பட்டால், பேப்பர் கழிவினால் செய்யப்பட்ட அந்த பாகம் மண்ணினால் சிதைந்து விதை முளைக்கத் தொடங்கிவிடும். இது ஒரு எளிய பயனுள்ள பரிசாக அனைவருக்கும் புத்தகத்துடன் இணைத்து வழங்கப்பட்டது.