எஸ்.என்.எஸ். கல்லூரி ஆண்டு விழா கொண்டாட்டம்

எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி 22வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

எஸ்.என்.எஸ். நிறுவனங்களின் நிறுவனர் ராஜலட்சுமி, தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் மற்றும் அனைத்துப் பிரமுகர்களும் விளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர். துணை முதன்மை நிர்வாகி தமிழ்செல்வம் அனைவரையும் வரவேற்றார். ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் செந்தூர் பாண்டியன் அறிவித்தார்.

தலைமை விருந்தினர் பெங்களூரு ஏ.பி.பி. நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டுத் தலைவர் சுப்பா ராவ் பேசுகையில், மாணவர்கள் தொடர்ந்து கற்றலில் ஈடுபட வேண்டும் என்றும், கற்றலில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வெற்றியை அடைய பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் குணம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கௌரவ விருந்தினராக காக்னிசன்ட் நிறுவனத்தின் இணை இயக்குநர் சந்திரசேகரன் பங்கேற்று மாணவர்களை அவர்களின் வாழ்க்கைக்கு நன்கு தயார் செய்ய வேண்டும் என்று ஊக்குவித்தார். குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

கல்வியில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்கள். ஆலோசனை, மானியங்கள் மற்றும் காப்புரிமை வெளியீடு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய பல்வேறு ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள். முனைவர் பட்டம் பெற்றவர்கள் தலைமை விருந்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.

எஸ்.என்.எஸ். நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல் குமார், ஆல்ரவுண்டர் பெர்ஃபார்மர், ஃபைவ் பில்லர் அவார்ட் மற்றும் பெஸ்ட் அவுட்கோயிங் கிராஜுவேட் போன்ற விருதுகளை அறிவித்தார். துணை முதன்மை கல்வியாளர் விவேகாந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.