‘100 சதவீதம்’ வாக்குப்பதிவு அவசியம்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தி ரோடு காளப்பட்டி சாலை சந்திப்பில் சங்கரா கண் மருத்துவமனை ஊழியர்கள் மனித சங்கிலி பேரணியை நடத்தினர்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் (கோவை-வடக்கு) கோவிந்தன், சரவணம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த், சங்கரா கண் மருத்துவமனை தலைமை அதிகாரி பினிதா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 200க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.