இந்தியா – சிங்கப்பூர் இடையே ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிங்கப்பூர் ஜேம்ஸ்குக் பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு மற்றும் மாணவர் நலம் சார்ந்த கூட்டு ஆய்வுகள், கலாச்சாரம் மற்றும் கல்விசார் பரிமாற்றங்களுக்கு உதவும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர்.

நிகழ்வில்  எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி மற்றும் சிங்கப்பூர் வளாகத்தலைவர் பேராசிரியர் கிறிஸ்ரூட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான கல்விப் பரிமாற்றங்கள். கூட்டு ஆய்வுகள் மற்றும் உலகளாவிய கற்றல் போன்றவற்றில் மேம்பாடு அடைய முடியும் என்று எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி  குறிப்பிட்டார்.

கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் கணினி அறிவியல் துறைத்தலைவர் தாஜுனிஷா ஆகியோர் சிங்கப்பூர் வளாகத்திற்கு நேரில் சென்று கல்விசார் கூட்டு ஒத்துழைப்பு மற்றும் தொடர் முயற்சிகள் குறித்த கருத்துப்பரிமாற்றத்தில் பங்கேற்றனர்.