100 சதவீத வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பேரணி

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், பி.காம் சி.ஏ துறை நாட்டு நலப்பணித்திட்டம் தேசிய மாணவர் படை, இவற்றுடன் குறிச்சி தொழில் பேட்டை அரிமா சங்கம் 324 சி இணைந்து 100 சதவீத வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வுப் பேரணியை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், சதீஷ்குமார், துணை முதல்வர் வாசுதேவன் உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கு பெற்றனர். 324 சி கவுன்சில் தலைவர் கருணாநிதி மற்றும் முதல் துணை வட்டாட்சியர் தேர்வு ராஜசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். வாக்களிப்பதில் ஒரு குடிமகனின் முக்கியப் பங்கு குறித்தும், குடிமைப் பொறுப்பை பெருமையோடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சிட்கோவில் நடந்த இந்த நிகழ்வு, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வை இந்த நிகழ்ச்சி வழங்கியது. முழு வாக்களிப்பிற்கான தலையாய பொறுப்பினையும் விழிப்புணர்வையும் வழங்குவதில் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.