கே.பி.ஆர் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டிட பொறியியல் துறை, கோயம்புத்தூர் பில்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்துடன் இணைந்து, இறுதியாண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை நடத்தியது.

ஆறு நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியின் முதல் ஐந்து நாட்கள், பல்வேறு தலைப்புகளைப் பற்றி அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் பேசினர். மேலும், மாணவர்கள் கே.என்.ஆர்.சி.எல் ப்ரீ காஸ்ட் யார்டு மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவின் பிளம்பிங் ஆய்வகம் ஆகிய இடங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் மாணவர்களுக்கு நிஜ-உலகப் பயன்பாடுகள் மற்றும் நுட்பங்கள் பற்றி அறிய நேரடி வாய்ப்பு கிடைத்தது.

இந்த முகாமின் முக்கிய நிகழ்வாக அடிப்படை நில அளவை கருவியான டோட்டல் ஸ்டேஷன் குறித்தப் பயிற்சி வழங்கப்பட்டது. இறுதியில் 16 முக்கிய நிறுவனங்கள் பங்கேற்ற மாதிரி வேலை வாய்ப்பு முகாமில் 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை ஆர்வமுடன் வெளிப்படுத்தினர். அதோடு இந்தப் பயிற்சியானது மாணவர்கள் தொழில்துறை பிரதிநிதிகளுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் உதவும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.