ஆண்டு சம்பளம் ரூ.18.5 லட்சம்- நேரு கல்லூரி மாணவி சாதனை

நேரு கல்வி குழுமத்தில் பயின்ற மாணவ-மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் ‘ரித்தி 2024’ விழா கல்லூரி வளாகத்தில் உள்ள பி.கே. தாஸ் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு கார்ப்பரேட் பிளேஸ்மெண்ட் அண்ட் இண்டஸ்ட்ரி ரிலேஷன் இயக்குநர் ரமேஷ் ராஜா வரவேற்றார். ட்ரைனிங் மற்றும் டெவலப்மென்ட் துறை இயக்குநர் அருண்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர் கிருஷ்ண குமார் விடுத்த வாழ்த்துச் செய்தியில்,‘நேரு கல்வி குழுமமானது கடந்த 54 ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சிறப்பான கல்வி பணியாற்றி வருகின்றது. இங்கு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் அரசு மற்றும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு கிடைக்கின்றது. நேரு கல்வி குழுமத்தில் பயின்ற மாணவ மாணவியர் உலகம் முழுவதும் நல்ல நிலையில் வேலைவாய்ப்பை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.

இந்தியா முழுவதிலும்  இருந்து சுமார் 180 – க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து சுமார் 2300 – க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் வெரோனிக் ஜிடோனியா என்ற மாணவிக்கு அலைட் சொல்யூசன் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூபாய் 18.5 சம்பளத்தில் பணி நியமனம் கிடைத்தது. மேலும் 12 லட்சம் சம்பளத்தில் 7 மாணவ மாணவியருக்கும், 7 லட்சம் சம்பளத்தில் 172 மாணவ மாணவியருக்கும், ஐந்து லட்சம் சம்பளத்தில் 248 மாணவ மாணவியருக்கும், ரூபாய் 3 லட்சம் சம்பளத்தில் 791 மாணவ மாணவியருக்கும் பணி நியமான ஆணை வழங்கப்பட்டது.

விழாவில் நேரு கல்வி குழுமத்தின் அகடமிக் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் செயல் இயக்குநர் நாகராஜா வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக விர்டுசா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையின் துணைத் தலைவர், சந்திரசேகர் சென்னியப்பனும், கௌரவ விருந்தினராக காக்னிசன்ட் நிறுவனத்தின் இயக்குநர்  சக்திவேல் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.