ரூட்ஸ் நிறுவனம் சார்பில் மனிதச் சங்கிலி விழிப்புணர்வு

ரூட்ஸ் குருப் ஆப் கம்பெனிஸ் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் மனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இயக்குநர் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வரவேற்புரையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், 100 சதவீதம் வாக்கைப் பதிவு செய்வதை வலியுறுத்தி பொதுமக்களிடம் விநியோகிக்கத் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் வெளியிட்டார்.

ரூட்ஸ் குழுமத்தின் தலைவர் ராமசாமி பேசுகையில், ‘கோவையின் மக்கள் தொகையை ஒப்பிடுகையில் பதிவாகும் வாக்கு சதவீதம் மிகவும் குறைவு. வாக்களிப்பது ஜனநாயகக் கடமை. அரசாங்கம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. ஆகையால், நமது கடமையைத் தவறாமல் செய்திடுவோம். 100 சதவீதம் வாக்கைப் பதிவு செய்வோம் என உறுதியெடுப்போம்’என்று பேசினார்.

மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், ‘தொழில், மருத்துவம், கல்வியின் மையமாக விளங்கும் கோவையில் வாக்குப் பதிவை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக, ரூட்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. சி.எஸ்.ஆர். அமைப்புகள் உருவாக்கும் முன்பே கோவையில் தனியார் பங்களிப்புடன் பல்வேறு சமூக விழிப்புணர்வு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர். 100 சதவீதம் வாக்கைப் பதிவு செய்வோம்’.

ரூட்ஸ் நிறுவன தொழிலாளர்கள் 100 சதவீத வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.