குறைப்பிரசவ குழந்தைகளின் உயிர்காக்க நிதி சலுகை!

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி காட்டன் சிட்டி சார்பில் குறைமாத குழந்தைகளுக்கான உயிர் காக்கும் திட்டம் அறிமுகம்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரோட்டரி சங்கம் கோயம்புத்தூர் காட்டன் சிட்டி இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் ஐ.சி.யூ.வில் சிகிச்சை தேவைப்படும் குறைமாத குழந்தைகளுக்கு நிதி உதவியுடன் சிகிச்சை அளிக்கும் ‘லிட்டில் மிராக்கிள்ஸ்’ எனும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இந்த துவக்க நிகழ்ச்சியில் எஸ்.என் .ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ டி. லக்ஷ்மிநாராயணசுவாமி கலந்துகொண்டார். ரோட்டரி சங்கம் கோயம்புத்தூர் காட்டன் சிட்டியில் இருந்து செல்ல ராகவேந்தரன், அஜய் குப்தா, கிருஷ்ணா சமந்த், டாக்டர் நீதிகா பிரபு, சந்தோஷ் முந்த்ரா,பிரதீப் கர்னானி , பிரசன்ன குமார் கோத்தாரி மற்றும் கோயம்புத்தூர் காட்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

குறைமாதப் பிரசவம்  என்பது நாடு முழுவதும் உள்ள குடும்பங்களைப் பாதிக்கும் ஒரு அழுத்தமான பிரச்சினையாகும், இந்த கடின சூழலில் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு ஆதரவாக ரோட்டரி சங்கம் கோயம்புத்தூர் காட்டன் சிட்டி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது ‘லிட்டில் மிராக்கிள்ஸ்’ முயற்சியின் மூலம், சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை தொடர்புடைய செலவுகளை ஈடுசெய்யும் வகையில் நிதி உதவி வழங்கப்படும். இந்த விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற தேவையான மருத்துவ நடைமுறைகளுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை சலுகை கட்டணத்தில் சிகிச்சை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.