தேசிய அளவிலான ‘எல்சியா-2K24’ தொழில்நுட்ப கருத்தரங்கம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் ‘எல்சியா-2K24’ என்ற தலைப்பில், கங்கா கலை அரங்கத்தில் நடைபெற்றது.

சிறப்பு  விருந்தினராக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி புத்திர பிரதாப் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் , ‘நீங்கள் வேகமாகசெல்ல விரும்பினால் தனியாக செல்லுங்கள்….. நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்" என்று மாணவ, மாணவிகளுக்கு மேற்கோள் காட்டினார். மாணவர்கள் தங்களது கல்விப்பயணத்தில் இளங்கலை , முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளை யு.ஜி.சி. கேர் ஸ்கோப்பஸ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நாளிதழ்களில் வெளியிடுமாறு கூறினார்.

இந்த கருத்தரங்கத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட  இன்ஜினியரிங் கல்லுரியில் இருந்து 300க்கும் மேற்ப்பட்ட மாணவ;மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகையுடன் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் மற்றும் கலந்துகொண்ட அணைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மின் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் ஆனந்தமூர்த்தி வரவேற்புரை வழங்கி விழாவினை துவக்கிவைத்தார். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களின் கல்வி திறன் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற திறமையை வெளிப்படுத்த உறுதுணையாக இருக்கிறது என்று கூறினார்.

கல்லூரி முதல்வர் ஜெயா, வாழ்த்துரை வழங்கி பேசுகையில், ‘இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தேசிய நிலைத்தன்மை தாக்க நிறுவனத்தின் தரவரிசையில் (NSIIR) நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது: நிலைத்தன்மை, சுற்றுச்சூழல்  பொறுப்பு மற்றும் சமூக தாக்கத்திற்கான அர்ப்பணிப்பு வழிகளில் நமது கல்லூரி சார்பாக நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் 17 SDG கோல்களில் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட கோல்களை பூர்த்தி செய்வதாக கூறினார். மாணவர்கள் தங்களது திறமைகளை ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும்காப்புரிமை பெறுவதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.