இந்துஸ்தான் கல்லூரியில் ‘தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்’

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் வேதி பொறியியல் துறை மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் இணைந்து தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கை கங்கா கலை அரங்கத்தில் அண்மையில் நடத்தினர்.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிமெண்ட்ஸ் லிமிடெட்டின் செயல்முறை பொறியாளர் ஆண்டனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதோடு இந்துஸ்தான் கல்லூரியின் டீன் மகுடேஸ்வரன், வேதிப் பொறியியல் துறைத்தலைவர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கருத்தரங்கை நடத்தியதற்கு இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதிஷ் பிரபு, கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் கருணாகரன் மற்றும் முதல்வர் ஜெயா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பயன் பெற்றனர்.