பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூக்கத்தின் முக்கியத்துவம் அதன் நன்மைகளை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 15 ஆம் தேதி உலக தூக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் நிம்மதியான தூக்கத்தின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் தெளிவுபடுத்தும் நோக்கில் விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டது. இதில், பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் புவனேஸ்வர் மற்றும் பிறதுறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்றனர்.