அஜின்கியா ரஹானேவை ஒதுக்கி விட்டதே தோனி தான் சேவாக் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் ஐபில் கிரிக்கெட் போட்டிகள் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. களத்தில் வீரர்கள் ஒருபுறம் மல்லு கட்ட, களத்திற்கு வெளியே முன்னாள் வீரர்கள் அடிக்கும் கமெண்ட்கள் சமூகவலைதளத்தில் விவாதத்தை கிளப்பி வருகிறது.

ஐபில் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் முறையாக களமிறங்கிய ரஹானே மும்பையின் கோட்டையான வான்கடே ஸ்டேடியத்தில் சிக்ஸர்களும் பௌண்டரிகளுமாக விலாசி, 27 பந்துகளில் 61 ரன்களை குவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

அதுவும் மும்பைக்கு எதிரான ரஹானேவின் இந்த அட்டகாசமான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் ஐபில் மினி ஏலத்தில் 50 லட்சத்துக்கு எடுக்கப்பட்ட ரஹானே மும்பைக்கு எதிராக சிறப்பான சம்பவத்தை செய்தார். தோனியும் ரஹானேவின் அதிரட்டியான ஆட்டத்தை பார்த்து பாராட்டினார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவருமான சேவாக், CSK Squad ல் ரஹானேவை இப்போ ஏன் எடுத்தீங்கனு தோனிக்கு ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார். அதாவது தோனி தான் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ரஹானேவை கழற்றி விட்டார்.

அவர் மெதுவாக விளையாடுகிறார் அதனால் அவரை ஒரு நாள் போட்டியில் எடுக்கவில்லை என்றார். ஆனால் இப்போது என்னவென்றால் ஐபில் கிரிக்கெட்டில் தன்னுடைய அணிக்காக எடுத்துருக்கிறார். வீரர்களுக்கு தன்னபிக்கை வேண்டும், நான் தோனியிடம் ஒன்று கேட்கிறேன், அவர் ஸ்லோவாக ஆடுகிறார் என்று இந்திய அணிக்கு எடுக்கவில்லை, ஆனால் தோனிக்கு அனுபவமிக்க வீரர் தேவை என்பதால் ரஹானேவை எடுத்துள்ளார் என சேவாக் கூறியுள்ளார்