இந்துஸ்தான் கலை கல்லூரியில் விளையாட்டு விழா

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் விளையாட்டுத் துறை சார்பில் 26வது விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டைரக்ட்ரேட் ஜென்ரல் ஆஃப் கூட்ஸ் அண்ட் சர்வீஸ் டாக்ஸ் இன்டெலிஜென்ஸின் கோயம்புத்தூர் மண்டல பிரிவின் துணை இயக்குநர், (DGGI), பிரபாகரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. மேலும் இதில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, உடற்கல்வி இயக்குநர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.