ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியியின் 28 ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவில் மெக்கானிக்கல் துறை தலைவர் V.சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் உமா ஆண்டறிக்கை வாசித்தார். எஸ்.என்.ஆர.சன்ஸ் அறகட்டளை நிறுவனங்ளின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றினார்.

சிறப்பு விருத்தினராக அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர் (இந்தியா) அமைப்பின் தலைவர் சுதாகர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “கல்வியின் மூலமே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும். விட முயற்சி, கடின உழைப்பு, தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்படுவது, யாரையும் சார்ந்து வாழாமல் தன்னம்பிக்கையோடு எதனையும் எதிர் கொள்ள்ளும்போதுதான் சிறந்த வெற்றியாளராக திகழமுடியும் என்றார்”.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் கல்லூரியின் சிறந்த மாணவராக. ஆட்டோமொபைல் துறை மாணவர் ஆர்.திவ்யேஷ் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்க பட்டார். மேலும் ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெற்ற மாணவர்களில் கட்டிடவியல் துறையில் எஸ் .நரேன் மெக்கானிக்கல் துறை பிரிவு A மற்றும் பிரிவு B ஆகியவற்றில் எம்.கெளதம் மற்றும் ஆர்.எஸ் விக்னேஷ் சாரதி ஆகியோருக்கும், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர் .சஞ்சய், கணிப்பொறி துறையில் ஜே.லிப்னின் டேனிஷ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் துறையில் A.M. சண்முகி ஆகியோருக்கு பரிசுத்தொகையுடன், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பின்னர் மாலையில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் பணியாளர்கள்,மாணவர் மற்றும் மாணவியர் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவின் இறுதியாக கட்டிடவியக் துறை தலைவர் வேதிதா நன்றி கூறினார்.