டாடா நிறுவனத்தின் டாடா குளுக்கோ+-க்கான கோடைக்கால விளம்பரம் வெளியீடு

கால்பந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தம் வகையில் டாடா கன்ஸ்யூமர் நிறுவனம் தனது டாடா குளுக்கோ+ குளிர் பானத்திற்கான புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. கால்பந்து உலக சாம்பியன் அர்ஜென்டினா அணியின் உற்சாகமூட்டும் ஸ்பான்சரான டாடா குளுக்கோ+ தனது புதிய சீசன் விளம்பரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் இலவசமாக அர்ஜென்டினாவுக்கு செல்லும் வாய்ப்பை இது வழங்குகிறது. இந்த பேக்கில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து இதில் உள்ள இன்டராக்டிவ் கேமை விளையாடி வெற்றி பெறும் ரசிகர்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் லியோனல் மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா, ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் என்ஸோ பெர்னாண்டஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் அர்ஜென்டினாவில் நடைபெற உள்ள கால்பந்து போட்டியை காண வெற்றியாளர்களுக்கு நம்பமுடியாத வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வாய்ப்பை எந்தவொரு டாடா குளுக்கோ+ தயாரிப்பையும் வாங்குவதன் மூலமும், பேக்கில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமும் பெறலாம். ‘அர்ஜென்டினா செல்லுங்கள்,  அர்ஜென்டினா அணியின் விளையாட்டைப் பாருங்கள்’ என்னும் புதிய கோடைக் கால விளம்பரத்தை டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  சவால்களைச் சமாளிப்பது அல்லது விளையாட்டை வெல்வது போன்றவற்றில் கொஞ்சம் கூடுதலான ஆற்றல் அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். சமீபத்திய டாடா குளுக்கோ+ விளம்பரமானது, சவால்களை வேடிக்கையாக மாற்றுகிறது. இளம் கால்பந்து அணிகளை ஆர்வமுள்ள ரசிகர்களாகச் சித்தரிக்கிறது, விளையாட்டைப் பார்க்கும்போது அல்லது மைதானத்தில் விளையாடும்போது, தங்களுக்கு ஆற்றல் தேவை என்பதை உணர்ந்து, தங்களுக்கான ஆற்றலைப் பெற டாடா குளுக்கோ+ஐ பருகலாம் என்று இந்த விளம்பரம் முடிகிறது.

இந்த புதிய விளம்பரம் குறித்து நூரிஷ்கோ பீவரேஜஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விக்ரம் குரோவர் கூறுகையில், ‘அர்ஜென்டினா செல்லுங்கள், அர்ஜென்டினா அணியின் விளையாட்டைப் பாருங்கள்’என்னும் டாடா குளுக்கோ+ விளம்பரமானது இந்தியா முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கனவுகளை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அர்ஜென்டினா சூப்பர்ஸ்டார்களின் அதிரடி ஆட்டத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்கும் வாய்ப்பை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அர்ஜென்டினா கால்பந்து  அணியுடனான எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில் தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களை ரசிகர்களுக்கு வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த விளம்பரம் பிரதிபலிக்கிறது. எங்களின் ஆன்லைன் கேமை விளையாடும் ரசிகர்களுக்கு, போட்டி முடியும் வரை ஒவ்வொரு மணி நேரமும் பரிசுகள் வழங்கப்படுவதோடு, லீடர்போர்டில் சிறந்து விளங்குபவர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களைக் காண அர்ஜென்டினா செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.புத்துணர்ச்சியூட்டும் ஆற்றலை வழங்கும் டாடா குளுக்கோ+ ஆரஞ்சி பர்ஸ்ட், லெமனி ஜிங் மற்றும் லிச்சி ஜாப் ஆகிய 3 வித சுவைகளில் 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த விளம்பரம் டி. வுண்டர்மேன் தாம்சன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.