நடிகை நயன்தாரா நடித்த ஸ்லைஸின் புதிய கோடைக் கால விளம்பரம் வெளியீடு

இணையற்ற உண்மையான மாம்பழ சுவையுடன் நுகர்வோரைக் கவரும் வகையில் ஸ்லைஸ் நிறுவனம் அதன் புதிய விளம்பர தூதர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவைக் கொண்டு தயாரித்துள்ள தனது முதல் விளம்பரத்தை வெளியிட்டது. கோடை காலம் துவங்க உள்ள நிலையில் நுகர்வோரின் தீராத மாம்பழ ஆசைகளை நிறைவேற்றுவதில் ஸ்லைஸ் முக்கிய பிராண்டாக உள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில் அதன் ‘ராஸ் ஐசா கி பாஸ் நா சலேகா’ என்னும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் உண்மையான மாம்பழ அனுபவத்துடன் சிறப்பாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் தனது வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாகத் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவைக் கொண்டு இந்த விளம்பரத்தை ஸ்லைஸ் தயாரித்துள்ளது.  இந்த விளம்பரமானது, நயன்தாரா தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு, ஒரு நிகழ்ச்சிக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறார், அப்போது அவர் கண்ணாடியைப் பார்க்கும்போது, மாம்பழங்கள் மற்றும் பளபளக்கும் ஸ்லைஸ் பாட்டில்களின் வசீகரமான காட்சி அவருடைய கவனத்தை ஈர்க்கிறது. ஒரு கவர்ச்சியான புன்னகையுடன், அவர் ஒரு பாட்டிலை எடுத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் குடிக்கிறார். அவரது கைகளில் மாம்பழச் சாறுகள் வழிந்தாலும், அதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படாமல் ஸ்லைசை சுவையாக ருசித்துக் குடிப்பதில் முழுமையாக மூழ்கியுள்ளார். இந்த நிலையில், அவருடைய நண்பர்கள் நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்பது குறித்து நினைவுப்படுத்தி அவரை அழைக்கிறார்கள், ஆனால் அவர்களும் மனதை மயக்கும் ஸ்லைசால் ஈர்க்கப்படுகிறார்கள், ஸ்லைசின் சுவையைக் கேட்டு, இறுதியில் உண்மையான மாம்பழ இன்பத்தின் தவிர்க்கமுடியாத சுவைக்கு ஆளாகிறார்கள். இந்த அனுபவத்தின் சாராம்சத்தைக் கொண்டு இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாம்பழத்தை ருசிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது என்பதுடன் இந்த விளம்பரம் முடிவடைகிறது.

இந்த விளம்பரம் குறித்து ஸ்லைஸ் மற்றும் டிராபிகானா, பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் இணை இயக்குன்ர் அனுஜ் கோயல் கூறுகையில், எங்களின் புதிய கோடைக்கால விளம்பரமானது, மாம்பழ பயணத்தை எந்தவித தடையும் இல்லாமல் ருசிக்கும் மிகச்சிறந்த ஸ்லைஸ் சுவையை வெளிப்படுத்துகிறது. எங்களின் புதிய பிராண்ட் அம்பாசிடர் நயன்தாராவுடன் இணைந்து எங்களின் முதல் தொலைக்காட்சி விளம்பரத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார். இந்த 360 டிகிரி பிரச்சாரமானது தொலைக்காட்சி, டிஜிட்டல், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட உள்ளது.