மண்டல அளவிலான  கிரிக்கெட் போட்டி: 13வது சாம்பியன் கோப்பையை வென்றது நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்  கல்லூரி  அணியானது இறுதிப்போட்டியில் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி அணியினை வீழ்த்தி கோவை மண்டல அளவிலான  சாம்பியன் கோப்பையை 13வது முறையாக வென்றது.

முன்னதாக நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி தங்களை எதிர்த்து விளையாடிய ஸ்ரீ ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லூரி அணியை 62 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அரை இறுதி போட்டியில், கோவை சங்கர பாலிடெக்னிக் கல்லூரி அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் கோவை, சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் கோவை மண்டல அளவிலான கிரிக்கெட் சாம்பியன் டிராபியை 13-வது முறையாக வெற்றி  பெற்றது.

மேலும், இந்த வெற்றியின் மூலம் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற நாச்சிமுத்து பாலிடெக்னிக் கிரிக்கெட் அணி வீரர்களைக் கல்லூரியின் செயலாளர் பேராசிரியர் ராமசாமி , கல்லூரியில் முதல்வர் அசோக்  மற்றும் உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தினர். .