வாசன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி

கண்பார்வை இழப்பு, கண் பார்வையின்மை, கண்களின் மீது செலுத்த வேண்டிய கவனம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை நாளினை  “உலக கண் பார்வை நாளாக” அனுசரிக்கப்படுகிறது.

இம்முயற்சியை  முதல் முதலாக  2000-ம் ஆண்டில் “பார்வைக்கு முதலிடம்” எனும் பிரசாரத்தை சர்வதேச லயன்ஸ் கிளப் பவுண்டேஷன் ஏற்படுத்தித் துவக்கினர்.

அதன் வகையில், உலகப் பார்வை தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் கிளையின் வாசன் ஐ கேர் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு பேரணியை புதன்கிழமை நடத்தினர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு மாநகர காவல் துணை ஆணையாளர் சண்முகம் கலந்துகொண்டு, பேரணியைத்  துவக்கி வைத்தார்.

வாசன் கண் மருத்துவமனையில் தொடங்கிய இப்பேரணி ஆர்.எஸ்.புரம் மைதானம், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம், தடாகம் சாலை வழியாக மீண்டும் வாசன் கண் மருத்துவமனையில் நிறைவடைந்தது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் அழகு ஜெயபாலன், ரோட்டரி 3201 மாவட்ட இயக்குநர் கோகுல்ராஜ், ஆர்.சி.சி தலைவர் கணேசன், கண் நரம்பியல் மற்றும் ஃபாகோ அறுவை சிகிச்சை நிபுணர்  கிருபா பால், விழிதிரை அறுவை சிகிச்சை நிபுணர் அனுசா வெங்கட்ராமன், கருவிழி மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் ஜெய மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும்,  உலகப் பார்வை தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு  வருகின்ற நவம்பர் 15ம் தேதி வரை, இலவச கண் பரிசோதனைகளை வாசன் ஐ கேர் மருத்துவமனை நடத்தவுள்ளது.  இவ்வாய்ப்பினை அனைத்துப்  பணியாளர்களும்  தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து  கண் பரிசோதனை செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.