
கோவை நேரு கல்வி குழுமத்தில் உள்ள நேரு ரைபில் கிளப் மாணவர்கள் கடந்த ஜூலை 24-31 தேதியில் , திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றினார்கள். அப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் 5 தங்க பதக்கங்கள் , 7 வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ். சமீரன் மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தார்.