ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 19வது பட்டமளிப்பு நடைபெற்றது.

நிகழ்வில் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ ஆர்.சுந்தர் தலைமை வகித்து பட்டதாரிகளை வாழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் எஸ்.கார்த்திகேயன் கலந்து கொண்டார்.

10 துறைகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு எஸ்ஆர்டிசிஹெச் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், 100 பிடிஎஸ் பட்டதாரிகள், 11 எம்டிஎஸ் முதுகலை பட்டதாரிகள் சிறப்பு விருந்தினரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றனர். சிறந்த மாணவி விருதினை டாக்டர்.எஸ். திவ்யஸ்ரீ உட்பட 4 தங்கப் பதக்கங்களை வென்றார்.

இதில் கல்லூரி முதல்வர் தீபாநந்தன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.