தெருநாய்கள் தொல்லை : கவலை வேண்டாம்!

கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தெருநாய்களுக்கு ஒளிரும் பட்டைகளை அணிவித்து வருகின்றனர்.

கோவை மாநகரில் தெரு நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாய்கள் குறித்த கணக்கெடுப்பு பணி சமீபத்தில் நடைபெற்று முடிந்து, நாய்கள் கருத்தடை மையமும் புனரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

ஆனாலும் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் அங்கும் இங்குமாக ஓடித் திரியும் தெரு நாய்கள் மீது மோதும் வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர்.

இதனிடையே சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தெரு நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டைகளை ஒட்டி வருகின்றனர். இதன் மூலமாக இரவு நேரங்களில் சாலைகளில் உலா வரும் நாய்களை சுலபமாக அடையாளம் காண முடியும் என்றும், இதன் மூலமாக தெரு நாய்களால் ஏற்படும் விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.