18 வயதினருக்கு வாக்காளர் அட்டை கட்டாயம்   – அசோக், முதல்வர், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி.  

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி ஆகியன இணைந்து  18 வயது முடிந்த மாணவ மாணவியர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வை நடத்தியது.

நிகழ்வில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அசோக்  தலைமை வகித்து, 18 வயது முடிந்த மாணவர்கள் அனைவரும் கட்டாயம்  வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும் என்று கூறி  அதற்கான படிவத்தை மாணவர்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் திட்ட அலுவலர் நாகராஜன் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை வழங்கி உரையாற்றினார்.

பொள்ளாச்சி தேர்தல் நடத்தும்  அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஜெயசித்ரா,  துணை வட்டாட்சியர் சரவணன் ஆகியோரின் கருத்துக்களின் படி  கிராம நிர்வாக அலுவலர்கள் மாக்கினாம்பட்டி ஜெயந்தி, ஜமீன்  கோட்டாம்பட்டி சத்யபாமா, ஜமீன் ஊத்துக்குளி  ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு வாக்களிப்பு அவசியத்தையும்,  உரிமையையும் எடுத்துரைக்கப்பட்டு அனைவருக்கும் படிவம் வழங்கப்பட்டது .

இதில் நாச்சிமுத்து பாலிடெக்னிக்  கல்லூரியின் கட்டிடவியல் துறைத் தலைவர் குணசேகரன், மேலாளர் மணிவண்ணன், அலுவலக கணக்காளர் ராஜகோபதி, கட்டிடவியல் துறை முருகேசன், சின்னாம்பாளையம்  கிராம நிர்வாக அலுவலகப் பணியாளர்  பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில்  200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.