மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும்  புதிய போர்டல் அறிமுகம் 

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில் வேலை தேடுவோர் வேலை கொடுப்பவர் இணைக்கும் புதிய போர்டல் அறிமுக விழா நடைபெற்றது.

நிகழ்விற்கு  மும்பை என்.எஸ்.இ அகாடமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபிலாஷ் மிஸ்ரா தலைமை தாங்கினார் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமு வரவேற்றுப் பேசினார்.

புதிய போர்டல் குறித்து வர்த்தக சபை செயலாளர் அண்ணாமலை பேசியதாவது, இந்திய தொழில் வர்த்தக சபை தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வேலை ஆட்களைத் தேர்வு செய்யவும் கல்லூரிகளில் படித்து முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளை இணைக்க ஒரு முயற்சியாக கற்பகம் கல்லூரியோடு இணைந்து மாணவர்கள் கூட்டு முயற்சியாக போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் எந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது, எந்த நிறுவனத்தில் பயிற்சி திட்டம் உள்ளது என்பதை அறிந்து அதில் விண்ணப்பம் செய்யலாம்.  இதேபோல் தொழிற்சாலைகள் எந்தெந்த பணிக்கு ஆட்கள் தேவை என்பதையும் போர்டல்  மூலம் அறியலாம் இந்த வாய்ப்பை இந்திய தொழில் வர்த்தக சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இவற்றை மாணவர்களும் தொழிற்சாலை நிறுவனத்தைச் சார்ந்தவர்களும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

இது குறித்து, அபிலாஷ் மிஸ்ரா பேசியதாவது நாட்டில் ஆண்டுதோறும் 65 லட்சம் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இவர்களுக்காக சுமார் 80 லட்சம் வேலை வாய்ப்புகள் ஆண்டுதோறும் உருவாக்கப்படுகிறது. ஆனால் மாணவர்களிடையே வேலை வாய்ப்பு இல்லை என்ற தவறான கருத்து வருகிறது இவற்றை முறைப்படுத்துவதற்கு இது போன்ற புதிய தலங்கள் மிகவும் பயனுள்ளது. இவற்றை இந்திய தொழில் வர்த்தக சபை முன்னெடுத்து தொழிற்சாலைகளையும் கல்லூரி மாணவ மாணவிகளையும் இணைக்கும் செயலை செய்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரி சார்ந்த வேலை வாய்ப்பு துறை அதிகாரிகள், தொழிற்சாலைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.