ரோகிணியில் வெளியாகாது ‘லியோ’ அதிர்ச்சியில் ரசிகர்கள் !

கோலிவுட் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ‘லியோ’ திரைப்படம் தங்களது தியேட்டரில் வெளியாகாது என்று ரோகிணி திரையரங்கம் தெரிவித்துள்ளது. இது ஆவலோடு காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19 யில் வெளியாக உள்ளது. இதில் திரிஷா,அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக தமிழ் திரையுலகில் இந்த படத்திற்கு மிகுந்த ஆவல் இருந்து வந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு லியோ முன்னோட்டத்தை காணச் சென்ற ரசிகர்கள், ரோகிணி திரையரங்கை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனால் ரோகிணி திரையரங்கம் பெரும் பொருட்செலவை சந்தித்தது. இதனால் பாதிப்படைந்த ரோகிணி திரையரங்கம் தங்களது தியேட்டரில் லியோவை ரிலீஸ் செய்யமாட்டோம் என அறிவிப்பு பலகை வைத்துள்ளது.