எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை சார்பில் வாகனங்கள் நன்கொடை

எல்.ஐ.சி.யின் பொன் விழா அறக்கட்டளை சார்பில்  “ஹெல்பிங் ஹார்ட்ஸ்” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு இரண்டு நான்கு சக்கர வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

“ஹெல்பிங் ஹார்ட்ஸ்” நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சேவை செய்து வருகிறது.

இந்நிறுவனம் பயன்பெறும் வகையில், சுமார் 30 பேர் பயணிக்கக்கூடிய ஒரு வாகனத்தையும், சக்கர நாற்காலியுடன் வயது மூத்தோர் மற்றும் நோய்வாய்ப்படுவோர் பயணிக்கும் வகையில் ஒரு சிறப்பு வாகனத்தையும் ரூ.49.92 லட்ச ரூபாய் செலவில் எல்.ஐ.சி.நிறுவனம் வழங்கியுள்ளது.

இதில் எல்.ஐ.சி.நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் துரைசாமி மற்றும் தென்மண்டல மேலாளர் வெங்கடரமணன் தலைமையில் தென்மண்டல பிராந்திய விற்பனை மேலாளர் சந்தர் மற்றும் கோவை பகுதியின் முதுநிலைக்கோட்ட மேலாளர் ராஜேந்திர குமார் ஆகியோர் முன்னிலை வகித்து வாகனங்களை வழங்கினர்.