உலகத் தாய் மொழி தினக் கண்காட்சி

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு ”உலகத் தாய் மொழி தினக் கண்காட்சியை” தமித்துறை நடத்தியது.

இக்கண்காட்சியை கல்லூாியின் துணை முதல்வா் பேராசிரியர் பொ்னாட் எட்வா்டு அவா்கள் தொடங்கி வைத்தாா். ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழ் மொழியின் சிறப்பு, தமிழரின் பாரம்பரியம், 5 வகை நிலத்தின் சிறப்புகள், தமிழரின் மரபு விளையாட்டுகள், தமிழரின் விழாகள், பண்டைய தமிழக நில அமைப்பு, தமிழரின் வாழ்வியல் முறைகள், குறித்து கண்காட்சியில் பல பரிமானங்களின் கருப்பொருளில் படைப்புகளை செய்து வந்து காட்சிப்படுத்தியிருந்தனா்.

தாய் மொழி தினக் கண்காட்சியை அனைத்து மாணவ மாணவிகளும் பாா்வையிட்டு பயன்பெற்றனா். இக்கண்காட்சிக்காண முன் ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவா் சதீஷ்மோகன் தலைமையில் துறைப் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனா்.