எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களில் பெற்றோர்களின் அன்பை வெளிப்படுத்திய காதலர் தின கொண்டாட்டம்

எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களில் கல்லூரியில் காதலர் தினம், பெற்றோர்களைச் சிறப்பிக்கும் விதமாக நடத்தப்பட்டது. விழாவிற்கு வரவழைக்கப்பட்டிருந்த பெற்றோர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக முதலில் வாழ்த்துக் கவிதை வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அவர்களது குழந்தைகள் பாத பூஜை செய்விக்கப்பட்டது. அதன் பின்னர் அன்பின் அடையாளமாக பெற்றோர்களுக்கு வேலண்டைன்ஸ் டே பேண்ட் ‘valentine’s day band’ அணிவிக்கப்பட்டது.

மேலும் எஸ் என் எஸ் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைதியான மனம் தான் சிறந்த கல்விக்கு அடையாளம் என்ற தாத்பரியத்தை உணர்த்தும் வகையில் கலையழகு மிக்க புத்தர் சிலை நிறுவப்பட்டு அதை பெற்றோர்களுடன் எஸ் என் எஸ் கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர் திரு எஸ் என் சுப்பிரமணியம் அவர்கள் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ‘போர் ‘ திரைப்படத்தின் இயக்குனர் பிஜோய் நம்பியார் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை சஞ்சனா நடராஜன் இணைந்து போர் திரைப்படத்தின் ‘டீசரை’ வெளியிட்டனர். காதலர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு விருந்தினர்கள் கேக் வெட்டினர். எஸ்.என்.எஸ் மாணவ இசைக் குழுவினர் பாடலைப் பாடினர்.

அவர்களோடு இணைந்து நடிகர் காளிதாசன் பாடி மகிழ்ந்தார். தொடர்ந்து எஸ்.என்.எஸ் ஏகலைசர் நடனக் குழுவினரின் நடனம் நடைபெற்றது. பின்னர் சிவப்பு வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டது விழா இனிதே நிறைவு பெற்றது.