தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்கள்  சேர்க்கை

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்துக்களுடன், அகில இந்தியப் பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் வழிகாட்டுதல் படி திருப்பூர் வடக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் குத்புதின் தலைமையில் அரசியல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாகக் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ் சிறப்புரை வழங்கினார்.  இதில் மாவட்டச் செயலாளர் சின்னதுரை, மாவட்ட பொருளாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் அலாவுதீன், மாவட்ட செயற்குழு கன்சல்டிங் கனகராஜ் உள்ளிட்ட பல கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மேலும், காங்கேயம்  நகரம் வெள்ள கோவில் நகரம், வெள்ள கோவில் ஒன்றியம், அவிநாசி ஒன்றியம், பூண்டி ஒன்றியம், காங்கேயம் ஒன்றியம் என 400க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்