வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாராணியின் காதல்

இந்த அழகான இந்திய இளவரசி, தான் விரும்பிய நபரைத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தனது குடும்பத்திற்கு எதிராகக் கலகம் செய்தார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

காதல் கதைகளில், காதலர்கள் ஒன்று சேர்வதில் இருக்கும் தடைகள், அவர்களை எதிர்க்கும் பெற்றோர்கள் இந்த நடைமுறையானது நடுத்தர, உயர் நடுத்தர என்று பாராமல் அனைத்து தரப்பு குடும்பங்களில் எழும் பொதுவான பிரச்னை ஆகும். இதில், இளவரசி மட்டும் விதிவிலக்கா என்ன?

மேற்கு வங்காளத்தின் கூச் பெஹாரைச் சேர்ந்த மகாராணி இந்திரா தேவி அத்தகைய ஒரு உதாரணம். இளவரசி இந்திரா தேவி பரோடாவின் கெய்க்வாட் வம்சத்தில் பிறந்தவர். அவர் ஒரு முற்போக்கு சிந்தனை வாதி. அந்த காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி கற்கும் ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர்.
இந்திரா தேவி 18 வயதை எட்டியதும், அவளுடைய பெற்றோர் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். குவாலியர் மகாராஜா மதோ ராவ் சிந்தியாவுடன் அவரது திருமணத்தை ஏற்பாடு செய்தனர். அந்த நேரத்தில் மாதோ ராவ் ஏற்கனவே திருமணமானவர், அதாவது இந்திரா தேவி அவரது இரண்டாவது மனைவி மற்றும் இளைய ராணியாக இருப்பார். ஆனால், இந்திரா தேவிக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை. இந்த திருமணம் இரண்டு மராட்டிய சாம்ராஜ்யங்களுக்கும் ஒரு மைல்கல்லாக இருந்தது.

எனவே, இந்திரா தேவி மற்றும் மதோ ராவ் சிந்தியாவின் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டது. 1911ல், இந்திரா தேவி, கூச் பெஹார் இளவரசர் ஜிதேந்திர நாராயணை டெல்லி தர்பாரில் சந்தித்தபோது கதை ஒரு திருப்பத்தை எட்டியது. மகாராஜா நிருபேந்திர நாராயணனின் இரண்டாவது மகன் ஜிதேந்திர நாராயண்.
இவர்களின் காதல் கதை இரு வீட்டாருக்கும் தெரியவர பிரச்னை பூதாகரமானது. பிறகு தடைகளை தகர்த்து இருவரும் கரம் பிடித்தனர்.