ஆர்.வி.கல்லூரி சார்பில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி 

டாக்டர்.ஆர். வி.கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், மேட்டுப்பாளையம் போக்குவரத்துக் காவல்துறை மற்றும் டாக்டர். எஸ்.கே.எஸ் நினைவு கண் மருத்துவமனை சார்பாகச்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ரூபா, எஸ்.கே.எஸ்‌. நினைவு கண் மருத்துவமனையின் துணைத்தலைவர் தங்கராஜ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். காவல்துறை உதவி ஆய்வாளர் சிவராஜ், போக்குவரத்துக் காவலர் பிரபாகரன் பங்கேற்று பேரணியைத் தொடங்கி வைத்தனர்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சாலைகள் வழியாக நடைபெற்ற இப்பேரணியில்  கல்லூரி மாணவ,மாணவியர் 100 பேர் பங்கேற்று ‘தலைக்கவசம் உயிர்க்கவசம்’, ‘வளைவில் முந்தாதீர்’, ‘போதையில் பயணம் பாதையில் மரணம்’, ‘அதிவேகம் ஆபத்தில் முடியும்’,  ‘இடைவெளி காப்போம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு மக்களிடையே சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் நடந்து சென்றனர்.

இந்நிகழ்வில் கண் மருத்துவமனையின் மார்க்கெட்டிங் மேனேஜர் ரகுநாதன், மருத்துவமனைச் செவிலியர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.