அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

குப்பைகளை அப்புறப்படுத்தாத மாநகராட்சிக்கு எதற்கு குப்பை வரி, குப்பைகளை கையில் ஏந்தி, கோசங்கள் எழுப்பி கோவையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர் ஆர்.பிரபாகரன் தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சர்மிளா சந்திரசேகர் மற்றும் கோவை புதூர் ரமேஷ் ஆகியோர் மாமன்ற பிரதான அலுவலகம் முன்பு கோவை மாநகராட்சியை கண்டித்து கையில் குப்பைகளை ஏந்தி, கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாமன்றகுழு தலைவர் பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்
2 மாதங்களுக்கு பின்பு இன்று மாமன்ற கூட்டம் நடத்தப்படுகின்றது.

தனியாருக்கு 170 கோடி ரூபாய் குப்பை எடுக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் குப்பைகளை ஓழுங்காக எடுப்பதில்லை மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றது. போத்தனூர், சுந்திராபுரம், குனியமுத்தூர் உட்பட அனைத்து பகுதிகளிலும் துர்னாற்றம் வீசுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வில்லை எனில் ,மாநகராட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். என்று தெரிவித்து மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கி தமிழ்தாய் வாழ்த்து பாடி முடிந்ததும் அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் குப்பைவரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், இன்றய கூட்டத்தில் கொண்டுவரபட உள்ள தொழில்வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும் குரல் எழுப்பினார்.

மேலும் தொழில் வரி உயர்த்துவதை கைவிட வேண்டும் டெண்டர் விடப்பட்ட பின்னர் , குப்பை எடுக்க போதுமான வாகனங்களை தனியார் நிறுவனம் பயன்படுத்துவதில்லை. யாரோ ஒரு தனி நபருக்கு ஆதரவாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகின்றது என்று கூறினார்.