அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அமிர்தா வேளாண்மை கல்லூரியின் “ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின்” கீழ் மயிலேறிபாளையம் ஊராட்சியை சேர்ந்த இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் உள்ளூர் விவசாயிகளுக்கு கால்நடையில் குடற்புழு நீக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குடற்புழுவால் ஏற்படும் தீமைகளை பற்றி விவசாயிகளுக்கு மாணவர்கள் விளக்கினர். கன்றுகளுக்கு முறையாக குடற்புழு நீக்க மருந்து அளிக்கப்பட வேண்டியதும், ஒன்றரை மாத வயதில் முதல் தொடர்ந்து முறையாக குடற்புழு நீக்கம் செய்தல் அவசியம் மற்றும் கால்நடை மருத்துவர் பரிசோதனை அடிப்படையில் மாட்டின் எடை மற்றும் வயதை அறிந்து குடற்புழு நீக்க மருந்தை அளிக்கலாம் என்பதனை மாணவர்கள் விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

இந்த செயல்முறைகளை அமிர்தா வேளாண்மை மாணவர்கள் சிறப்பாக நடத்தி காண்பித்தனர். இந்நிகழ்ச்சி ஊராட்சி தலைவர் கோமதி மூர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது மற்றும் கிராம நிர்வாக அலுவலர் லோகியர் சந்திரசேகர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களை பாராட்டி தனது கருத்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுடனர்.