பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன் போட்டி

கே.ஜி.ஐ.எஸ்.எல். தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நடைபெற்ற தொழில்நுட்ப திறன் வளர்ப்பு போட்டியில் அசத்திய பள்ளி மாணவ மாணவிகள்.

“லெட்ஸ் கோட் தமிழ்நாடு 2024” மூலம் தொழில்நுட்ப திறன் வளர்ப்பது தொடர்பான மூன்று மாத பயிற்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு அளிக்கபட்டது. இப்பயிற்சியின் இறுதியில் கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களால் பைதான் திட்டப் போட்டிகள் நடத்தபட்டது. இதில் 30 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு மாணவர்களை நடைமுறை பைதான் திறன்களுடன் சிந்தனையை தூண்டுவதும், புதுமையான திட்டங்களைக் காண்பிப்பதற்கான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களின் வழிகாட்டிதலில் பைதான் பயிற்சியை பெற்ற மாணவர்கள் சிஸ்கோ பைதான் சான்றிதழைப் பெற்றனர். இந்த பைதான் திறன் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை கே.ஜி.மருத்துவமணையின் தலைவர் பக்தவச்சலம், கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி குழுமங்களின் தலைவர் அசோக் பக்தவச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர் பரிசுகளை வழங்கினர்.

இதில் முதல் பரிசினை கே.ஜி.எஸ் பள்ளியும், அவிலா கான்வென்ட் பள்ளியும் பெற்றன. இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள கே.ஜி.மகளிர் பள்ளியும், நான்காவது இடத்தை ஆதித்யா வித்யாசரம் பள்ளியும், ஐந்தாம் இடத்தை ஏ.ஆர்.எம் பள்ளி பெற்று அசத்தினர். மேலும் இந்த பைதான் போட்டிக்கு மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்த பேராசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கபட்டனர்.