ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் “வணிக வைபவ்”

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கான “வணிக வைபவ்”  நிகழ்ச்சி எனும்  மாணவிகளைத் தொழில் முனைவோராக்கும் முயற்சி நடைபெற்றது. இதில் கலைத்திறனோடு கூடிய அரங்குகள், உணவு, உடை, அழகுசாதனப் பொருட்கள், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் என்று பலவிதமான விற்பனையகங்களை மாணவிகள் அமைத்திருந்தனர்.

வி.ஜி விளம்பர நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி.கீதா விற்பனையைத் துவக்கிவைத்தார். இது குறித்து கல்லூரி முதல்வர் சித்ரா பேசுகையில், இந்த வணிக வைபவ் நிகழ்ச்சியின் மூலம் மாணவிகளின் வியாபாரத் திறமைகள் வளர்வதோடு, முறையான வணிகப்பயிற்சி, தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளுதல், மற்றவர்களோடு இணைந்து செயல்படுதல் போன்றவற்றையும் செய்முறைப் பயிற்சியாகப் பெறும் வாய்ப்புக் கிடைக்கிறது என்பதால் பெண்கள் வல்லமை பெற உதவும் ஒரு திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். எங்கள் கல்லூரி மாணவிகள் பலர் தற்போது வெற்றிகரமான தொழிலதிபர்களாக இருக்கிறார்கள் என்பதில் பெருமைப்படுகிறோம் என்றார்.