ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லூரியில் குடியரசு விழா

கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா கொண்டாடப்பெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி உதயம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்தகுமார் (எஸ்.என்.எம்.வி கல்லூரியின் முன்னாள் மாணவர்) கலந்து கொண்டு, கொடியேற்றி சிறப்பித்தார். அவர் தனது சிறப்புரையில், டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு. மகாத்மா காந்தி போன்ற தியாகிகளை இந்நன்னாளில் நினைவு கொள்ள வேண்டும்.

ஆசிரியர்களாளே நல்ல இளைஞர்களை உருவாக்க முடியும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். கல்லூரி படிக்கும் காலங்களில் தன்னை செதுக்கி தலைமைப் பண்பிற்கானத் தன்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தன்னை உதாரணப்படுத்திக் கூறினார்.
இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் மகாவீர் போத்ரா , செயலாளர் சுனில்குமார் நஹாடா, கோவை நலச்சங்கம் மற்று3ம் எஸ்.என்.வி பள்ளியின் செயலாளர் நிஷாந்த் ஜெயின், துணைச்செயலாளர் ரத்தன்சந்த் போத்ரா, கல்லூரியின் முதல்வர் முனைவர் சுப்பிரமணி, மேலாண்மைத்துறை இயக்குநர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். மாணவர்களிடம் தேசப்பற்றை விதைக்கும் வகையில் பேச்சு, கட்டுரை, கோலம் ஆகிய போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அவற்றில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை ஆங்கில துறைத்தலைவர் முனைவர் வே.சபரிராஜா அவர்கள் ஒருங்கிணைத்தார். மேலும் பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவினைக் கொண்டாடினர்.