குடியரசு  தினம்: க்ரோமாவில் சிறந்த சலுகைகள் அறிவிப்பு

இந்தியாவின் குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில், டாடா குழுமத்தின் நம்பகமான மற்றும் இந்தியாவின் முதல் ஆம்னி-சேனல் மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) சாதனங்கள் சில்லறை விற்பனையாளரான க்ரோமா, மிகவும் குறைந்த விலையிலான மற்றும் கவர்ச்சிகரமான குடியரசு தின விற்பனையைப் அறிவித்துள்ளது. 2024 ஜனவரி 20 முதல் ஜனவரி 28-ம் தேதி வரை இந்த சலுகை விலை விற்பனைக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.

டிவி-கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள், ஏசி, வாஷிங் மெஷின், மொபைல் போன்கள், லேப்டாப்கள், கெய்சர், மைக்ரோ ஓவன், ஏர் ஃப்ரையர், மிக்சி, க்ரோமா பிராண்ட் தயாரிப்புகள் மற்றும் பிற பிராண்டுகளான ஆப்பிள், பிலிப்ஸ், எல்ஜி, சாம்சங், டைகின், ரெட்மி, ஃபேபர், ஐஎஃப்பி போன்றவற்றின் தயாரிப்புகளுக்குப் பல அற்புதமான சலுகைகளை க்ரோமா வழங்குகிறது. 999 ரூபாயில் தொடங்கும் மாதாந்திர தவணையின் (இஎம்ஐ) மூலம் சாதனங்கள் வாங்குவதை மிகவும் மலிவானதாகவும் எளிதானதாகவும் மாற்றலாம். பழைய மின்சாதனப் பொருட்களை மாற்றிக் கொள்வதன் மூலமாக 5,000 ரூபாய் வரை பலன்களைப் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சலுகைகளின் மூலம் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியைப் பெறலாம்.

க்ரோமாவின் உயர்-தர எலக்ட்ரானிக்ஸ் பிராண்ட் பொருட்களில் அனைவருக்குமான தயாரிப்புகள் உள்ளன என்பது உறுதி. க்ரோமா-பிராண்டட் தயாரிப்புகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. உங்கள் வாஷிங் மெஷினை க்ரோமா பிராண்டட் 7.5 கிலோ ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷினாக நீங்கள் மேம்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். இதன் விற்பனை ரூ.1510* என்ற மாதத் தவணை விலையில் தொடங்குகிறது. க்ரோமா 50 அங்குல கூகுள் டிவி மாதத் தவணை  (இஎம்ஐ) ரூ.1,694 முதல் தொடங்குகிறது*. க்ரோமா அதன் மொபைல் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்குக் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி தொழில்நுட்ப ஆர்வலர்களை மகிழ்விக்கிறது. ஆப்பிள் பிரியர்களுக்கு, ஐபோன் 15 மாத தவணைகளில் மாதம் ரூ.1,954* என்ற மாதாந்திர தவணையில் தொடங்குகிறது. மேலும், ஆப்பிள் கைக்கடிகாரம் ரூ. 28,999-ல் தொடங்குகிறது. இது ஸ்மார்ட் வாட்ச் அணியும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இந்த விற்பனையில் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றுள்ளன, இது குறைந்த விலையாக ரூ.12,499-ல் தொடங்குகிறது. லேப்டாப் வாங்குபவர்களுக்கு, க்ரோமா ஒரு சிறந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு லேப்டாப் வாங்கும்போதும் ரூ. 9,990 மதிப்புள்ள இலவச உதிரி பாகங்களை க்ரோமா வழங்குகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில், க்ரோமா இந்த விற்பனைக்கு ஒரு சிறந்த தேர்வை வழங்குகிறது. எல்ஜி அல்ட்ரா ஹெச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி-கள் ரூ. 999 என்ற மாத தவணை விலையில் கிடைக்கின்றன. மேலும் சாம்சங்-கின் 10 கிலோ 5 ஸ்டார், முழுவதுமான தானியங்கி (ஆட்டோமேட்டிக்) டாப் லோட் வாஷிங் மெஷின்களின் விலை ரூ. 25,990 ஆகும். சாம்சங்கின் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ 236எல் குளிர்சாதனப் பெட்டிகள் ரூ. 24,490 என்ற தொடக்க விலையில் கிடைக்கின்றன. இது 12 மாத இஎம்ஐ தவணைத் திட்டத்திலும் கிடைக்கிறது. டைக்கின் பிராண்டின் குளிர் மற்றும் வெப்ப இன்வெர்ட்டர் ஏசி-கள் ஆண்டு முழுவதும் பயன்படுத்த ஏற்றவை. இது, மாதத்திற்கு வெறும் ரூ. 1899/- என்ற தவணை விலையில் தொடங்குகின்றன. மேலும், மேம்பட்ட ஒலி அனுபவத்திற்காக, குறைந்த விலையிலான சிறந்த சவுண்ட் பார்கள் மாதத்திற்கு ரூ .999* என்ற தவணை விலையில் கிடைக்கின்றன.