கே. பி. ஆர் கல்லூரியில் “சாதிக்கலாம் வாங்க” நிகழ்வு

தொழில் முனைவோர் மேம்பாட்டு குழு சார்பில் தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாடு மற்றும் சர்வதேச அளவிலான வணிக யோசனை போட்டி – 2023 கே. பி. ஆர் கல்லூரியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கே. பி. ஆர். கலை கல்லூரி முதல்வர் கீதா வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் முதல் அமர்வில் சாதிக்கலாம் வாங்க என்னும் தலைப்பில் கே.பி.ஆர் குழுமம் மற்றும் நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, தமிழக அரசின் முன்னாள் டிஜிபி மற்றும் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, குவைத் பிரில்லியண்ட் சொல்யூஷன் மேனேஜ்மென்ட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எஸ். சாந்தா மரியா ஜேம்ஸ், கோவை ஸ்ரீ அன்னபூர்ணாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெகன் தமோதரேன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

 

இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்த்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வதோடு கலந்துகொண்டு பயனடைந்தனர்.