நாட்டின் ஐந்து சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக கே.சி.டி அங்கீகாரம்

தொழில் மேம்பாட்டை ஊக்கவிக்கும் புதுமையான ஆராய்ச்சி திட்டத்தை செயல்படுத்தும் 2023 ஆம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த 5 நிறுவனங்களில் ஒன்றாக குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு, இந்திய தொழில் கூட்டமைப்பால் கௌரவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, தொழில்துறை கண்டுபிடிப்பிற்கான விருது, 2022 ஆம் ஆண்டு புதுமையான நிறுவனங்களில் பித்தாக்கு சிந்தனை விருது, 2023 ஆண்டில் தொழில் மேம்பாட்டை ஊக்கவிக்கும் நிறுவனம் என தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கேசிடி கல்லூரிக்கு விருது வழங்கப்படுகிறது. டிசம்பர் 15 ஆம் தேதியன்று புதுடெல்லியில் நடைபெற்ற சிஐஐ டெக்னாலஜி கான்க்லேவ் அண்ட் இன்னோவேஷன் விருதுகள் நிகழ்ச்சியில் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்காக, தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கல்வி நிறுவனம் என்ற பெருமையும், அதேபோல் தென்னிந்தியாவில் இருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கல்வி நிறுவனம் என்ற சிறப்பையும் கேசிடி கல்லூரி பெற்றுள்ளது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) ரூர்க்கி, சிட்காரா பல்கலைக்கழகம் பஞ்சாப், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், குவாலியர் மற்றும் வட இந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் , காசியாபாத் ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த கௌரவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆராய்ச்சி/கல்வி நிறுவனங்களுக்கான சிஐஐ தொழில்துறை கண்டுபிடிப்பு விருதுகள், தொழில், அரசாங்கம் மற்றும் சமூகத்திற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களின் புதுமையான முயற்சிகளை அங்கீகரித்துக் கொண்டாடுவதற்கான ஒரு தளமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.