ஃபிளாட் பத்திரப் பதிவு : உதயநிதியிடம்  கோரிக்கை

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்யும் முறையில் தமிழ்நாடு அரசு டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து மாற்றம் செய்துள்ளது.
இதுவரை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் “பிரிபடாத பாக நில விற்பனைக்கு”  ஒரு பத்திரப் பதிவும், வாங்கும் ஃபிளாட்டின் “கட்டுமான ஒப்பந்தத்திற்கான”  மற்றொரு பத்திரப்பதிவும் என இரு பத்திரப் பதிவுகளை செய்து வந்தனர்.
புதிய பத்திரப்பதிவு  முறையில் கட்டணம் பல மடங்கு உயர்வு புதிய முறையில், நிலத்திற்கும் கட்டுமான ஒப்பந்ததிற்கும் சேர்த்து மொத்தமாக 7% பதிவுக் கட்டணம் செலுத்து வேண்டியுள்ளது. மேலும் அடுக்குமாடிக்குடியிருப்புகளுக்கு ஏரியா வாரியாக கைடுலைன் மதிப்பை அரசு நிர்ணயித்துள்ளது. இதனால் பிளாட் வாங்குபவர்கள் பழைய முறையை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகப் பதிவுக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு வீடு வாங்குவதை பெரும் சுமையாக்கி அவர்கள் வீடு வாங்குவதை அவர்களின் சக்திக்கு அப்பார்ப்பட்டதாக ஆக்கியுள்ளது.  இதனால் கட்டுமானத் துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இது தொடர்பாகக்  கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர்  குகன் இளங்கோ, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை  சந்தித்து புதிய பத்திரப் பதிவு முறையைப் பின்பற்றுவதினால் ஏற்படும் அதிகமான பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்து மீண்டும் பழைய இரு பத்திர பதிவு முறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.  இதுகுறித்து  உதயநிதி ஸ்டாலின்  ஆலோசித்து ஆவன செய்வதாகத் தெரிவித்தார்.