வி.எல்.பி கல்லூரியில் “திரை அச்சாக்கம்” பயிலரங்கம் 

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை, நவீன ஆடை வடிவமைப்புத்துறை மற்றும் காட்சி தொடர்பியல் துறை ஆகியோர் இணைந்து  “திரை அச்சாக்கம்” என்ற தலைப்பில் பயிற்சி பட்டறையை  நடத்தினர்.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை நடராஜ் ஸ்கிரீன்ஸ் நிறுவன உரிமையாளர் என்.கதிர்வேல் கலந்து கொண்டார். அவர் ஸ்கிரீன் பிரிண்டிங்கில் ஈடுபடும் செயல்முறையைப் பற்றி விரிவாக விளக்கினார். ஸ்கிரீன் பிரிண்டிங் பணிகளில் மரம் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட சட்டத்தின் மீது எவ்வளவு இறுக்கமாக நீட்டப்பட்ட நுண் துளை கண்ணி பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். திரையில் அச்சிடப்படும் பொருட்கள் மற்றும் திரை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் பற்றியும் எடுத்துரைத்தார். ஸ்கிரீன் பிரிண்டிங் துறையில் தொழில் முனைவோராக உருவாவதற்கான வணிக யோசனைகள் மற்றும் உதவிக்குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டார். இப்பயிலரங்கின் மூலம் மாணவர்கள் பல்வேறு அனுபவங்களைப் பெற்றனர்.