இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தியான கோவில்

உலகின் மிகப்பெரிய தியான மண்டபமான ஸ்வர்வேட் மகாமந்திர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உமராஹா பகுதியில் அமைந்துள்ள ஸ்வர்வேட் மகாமந்திர் எனப்படும் ஏழு அடுக்குகளைக் கொண்ட பிரமாண்டமான கோவில் உலகின் மிகப்பெரிய தியான மையமாக மாறியுள்ளது.

மக்கள் பயன்பாட்டிற்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இந்த கோவில் வாரணாசி நகரத்தில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விஹங்கம் யோகத்தை உருவாக்கியவரும் நித்திய யோகியுமான சத்குரு ஸ்ரீ சதாஃபல் தியோஜி மஹாரா எழுதிய ஆன்மீக இலக்கியமான ஸ்வார்வ்வின் நினைவாக இந்த கோவிலுக்கு ஸ்வர்வேட் மகாமந்திர் என்று பெயரிடப்பட்டது.

3,00,000ம் சதுர அடி பரப்பளவு, 20,000 பேர் அமரும் வசதி, 125 இதழ்கள் கொண்ட தாமரைக் குவிமாடங்களுடன் அழகிய வடிவமைப்பு இக்கோவிலை தனித்து காட்டுகிறது. கோவிலில் 101 நீரூற்றுகள், தேக்கு மர கதவுகள் மற்றும் கூரைகள் உள்ளன.