கோவை – வாரணாசி இடையே சிறப்பு ரயில்

கோவையில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவையிலிருந்து டிசம்பர் 19- ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் கோவை – வாரணாசி சிறப்பு ரயில் (எண்: 06105) டிசம்பர் 21-ஆம் தேதி காலை 4.30 மணிக்கு வாரணாசி சென்றடையும்.

வாரணாசியிலிருந்து டிசம்பர் 24-ஆம் தேதி இரவு 11.20 மணிக்குப் புறப்படும் வாரணாசி – கோவை சிறப்பு ரயில் (எண்: 06106) டிசம்பர் 27-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கோவையைச் சென்றடையும்.

இதேபோல, டிசம்பர் 25 -ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை வாரணாசி சிறப்பு ரயில் (எண்: 06111), டிசம்பர் 27 அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசியைச் சென்றடையும். டிசம்பர் 30-ஆம் தேதி, இரவு 11.20 மணிக்குப் புறப்படும்  வாரணாசி – கோவை சிறப்பு ரயில் (எண்: 06112) ஜனவரி 2-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கோவைக்கு வந்து சேரும் இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.