ஐயப்பனை காண அவதிப்படும் பக்தர்கள்

மகர விளக்கு மண்டல  பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது. அதோடு, எதிர்க்கட்சியினர், பக்தர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் கேரள அரசுக்கும்;திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் அழுத்தம் தரப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பக்தர்கள் மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், 18 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலையும் உருவாக்கி உள்ளது. முன்னதாக, சபரிமலை ஐயப்பன் சன்னதியை அடைவதற்காக நடைப்பயணம் மேற்கொண்டிருந்த 11 வயது சிறுமி மயங்கி விழுந்து எதிர்பாரா விதமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்குக் கடுமையான கண்டன்கள் வலுத்தது வருகிறது.

Image

இதனையடுத்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பினராயி விஜயன், நிலக்கல்லில் நடைபெற்று வரும் உடனடி விரைவு தரிசன முன்பதிவு முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. சபரிமலையில் தற்போது நிலவும் கூட்ட நெரிசலுக்குக் காரணம் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல்லே பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வந்ததாகவும், வழக்கமான எண்ணிக்கையைவிட டிசம்பர் 7 ஆம் தேதி மட்டும் ஒரு லட்சம் பேர் சபரிமலையில் குவிந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும், பக்தர்கள் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படைத் தேவைகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. அதேபோல், அலைமோதும் கூட்டத்துக்கு இடையில் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பாதியில் பாதியில் வீடு திரும்பிவருகின்றன பக்தர்களில் பெரும்பாலானோர் பந்தளம் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலுக்கு சென்று இருமுடியை சமர்ப்பிக்கின்றனர்.