இந்தியாவில் டாப் 5 எஸ்.யூ.வி கார்கள் என்ன தெரியுமா?

இந்தியாவில் கடந்த மாதம் விற்பனையான எஸ்.யூ.வி வகை கார்களில் முதல் ஐந்து இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கார் பிரியர்களுக்கு எஸ்.யூ.வி கார்கள் என்றாலே அலாதி பிரியம் எஸ்.யூ.வி கார்களின் கம்பீரமான தோற்றமும், அதன் செயல்திறனும், கொடுக்கப்பட்டுள்ள ஆப்சன்களும் கார் ஓட்டுபவருக்கு திருப்தியையும், சவுகரியத்தையும் கொடுக்கின்றன.

இவ்வகை கார்களின் விற்பனை இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகமாக விற்பனையான எஸ்.யூ.வி ரக கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நவம்பர் மாதத்தில் அதிகமாக விற்பனையான எஸ்.யு.வி கார்கள் பட்டியல்:

டாடா நிறுவனத்தின் நெக்சான் கடந்த மாதம் 14,916 கார்கள் விற்பனையாகியுள்ளன.

டாடா பன்ச் 14,383 கார்களும், மாருதி ப்ரீசா 13,393 கார்களும், மகேந்திரா ஸ்கார்பியோ 12,185 கார்களும், ஹுண்டாய் க்ரீடா 11,814 கார்களும் விற்பனையாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாக டாடா நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.