‘கல்லுக்குள் ஈரம்’ மேடையில் அழுத அதிபர் கிம் ஜாங் உன்

சுதந்திரம் பெற்றும் பயன் இல்லாத நாடான வடகொரியாவில் இந்நாள் வரையிலும் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. உடையில் கட்டுப்பாடு, நிற்பது, நடப்பது, திரைப்படம் பார்ப்பது, கேளிக்கை நிகழ்ச்சிகளில் விதிமுறை, புகைப்படம் எடுக்கக் கட்டுப்பாடு என மர்ம தேசத்தின் தாயகம் வடகொரியா என்றே சொல்லாம்.

இந்த நாட்டின் மக்கள் தொகை 2.61 கோடி மட்டும்தான் பரப்பளவில் மிகவும் சிறிய நாடு. ஆனால், உலக ஊடகங்கள், சமூக வலைத்தளங்களை எப்பொழுதும் ஆக்கிரமித்துக் கொள்ளும் செய்திகளின் தலையகமாக இருப்பவர் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். உலக தலைவர்களிடம் இருந்து சற்று வித்தியாசமானவரும் கூட. வெளி உலக தொடர்பே இல்லாத தலைவர். மக்களையும் அவ்வாறே வழிநடத்தி வருபவர். உலக நாடுகள் அமெரிக்காவை எதிர்க்க ஒரு நொடியேனும் தயக்கம் காட்டும். இதற்கு விதிவிலக்கு கிம் ஜாங் உன். நீ..என்ன சொல்வது..? என்பது போல் எதற்கும் அஞ்சாமல் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறவர். இப்படியான, சர்வாதிகார ஆட்சி நடத்தும் கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டும் காட்சிகள் ஊடகங்களில் பரவிப் பேசும் பொருளாகியுள்ளது.

வடகொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. சொல்லப்போனால், 1970-80 காலகட்டத்தில் அந்நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை அப்போதைய அரசு தீவிரமாக அமல்படுத்தியது. இதற்காகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்கிடையே கடந்த 1990ல் இருப்பினும், 1990ல் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஏராளமானவர்கள் பலியானார்கள். இதையடுத்து அந்த நாட்டில் மக்கள்தொகை மேலும் சரியத் தொடங்கியது.

இந்நிலையில், பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிம் ஜாங் உன் நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. நம் நாட்டை பாதுகாக்கப் பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பராமரித்து நன்றாக வளர்த்து முறையான கல்வியை வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றவர் கண்கலங்கியது தான் வலைதள வாசிகள் மத்தியில் டாக் -ஆப் தி டவுன் ஆக இருக்கிறது.