இந்தியாவில் பாதுகாப்பான நகரம் எது?

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி 3 ஆவது ஆண்டாக இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக கொல்கத்தா அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 103.4 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தற்போது 86.5 ஆக குறைந்துள்ளது. அதே வேலையில், தலைநகர் டெல்லியில் சைபர் குற்றங்கள் இரண்டு மடங்காக அதிகரித்து விட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-ல் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 345 ஆக இருந்தது தற்போது 685 ஆக உயர்ந்துள்ளது.