கோவையில் கிடந்த மண்டை ஓடு, மனித எலும்புகள்..!

கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மனித எலும்புகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் , அங்கு மனித மண்டை ஓடு, எலும்புக்கூடுகள் இருப்பதை உறுதி செய்தனர். இந்த எலும்புக்கூடுகள் மருத்துவ மாணவர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துள்ளனரா? அல்லது கொலை சம்பவம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா? என்ற கோணத்தில் எலும்புக்கூடுகளை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.