அரசின் நலத்திட்டங்களுக்கு இனி ஆதார் கட்டாயம்

– புதுச்சேரி சமூகநலத்துறை அறிவிப்பு.!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவுப்படி சமூகநலத்துறைச்செயலர் உதயக்குமார் அனைத்து செயலர்கள் மற்றும் துறைத்தலைவர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில், ”

சேவைகள், பலன்கள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான அடையாள ஆவணமாக ஆதாரை பயன்படுத்துவது, அரசாங்க விநியோக செயல்முறைகளை எளிதாக்குகிறது, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டு வருகிறது.

மேலும் பயனாளிகள் தங்கள் உரிமைகளை வசதியாகவும் தடையின்றி நேரடியாக பெற முடிகிறது. சமூகநலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 13 முக்கியத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.