இஸ்ரேல்-ஹமாஸ் போர் பேரழிவு; குழந்தைகள் எங்கும் செல்ல முடியாது

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது. மீண்டும் இரு நாடுகளுக்கு இடையில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் போர் தொடங்கி நடந்து வருகிறது.

கடந்த மாதம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதலை நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து இஸ்ரேல்- ஹமாஸ் போர் மூண்டது. காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய போரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய போரில் சுமார் 700 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு காசா பகுதியில் சண்டை நடந்து வருகிறது. ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் தெற்கு நகரமான கான் யூனிஸில் இருந்து வெளியேறுமாறு அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. அங்கு, இரு தரப்பினர்களுக்கு இடையில் தீவிரமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அதேசமயம் காஸாவிலிருந்து தெற்கு இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

A Palestinian boy carrying a baby stands at a site of Israeli strikes

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. நடந்து வரும் போர் காரணமாக சுமார் 2.3 மில்லியன் கொண்ட மக்கள் தொகையில் முக்கால்வாசிக்கு மேலான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், 41,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

Gaza

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் இரு நாட்டினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெற்றோர், குழந்தைகள் என உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். எங்கு திரும்பினாலும் அழு குரல்கள் கேட்கிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. மக்களின் கண்ணீர்க் கிடையில் நடக்கும் நூற்றாண்டின் கொடிய போராகப் பார்க்கப்படுகிறது. காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு மத்தியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் எங்கும் செல்ல முடியாத நிலை உருவாக்கியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் குழந்தைகளின் நிலையைப் பார்க்கும் போது நம்மை அறியாமல் நெஞ்சம் பதைபதைத்து சுக்கு நூறாக உடைகிறது. எப்போது முடிவுக்கு வரும் இந்த கொடிய போர்.?

https://twitter.com/i/status/1731629127805927499